தலைவர் 168ல் நயன்தாராவுக்கு இப்படியொரு ரோலா? வெளியான சூப்பர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். தலைவர் 168 என அழைக்கப்படும் அப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் நயன்தாராவின் ரோல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நயன்தாரா இதுவரை ஏற்று நடிக்காத வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.