பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை! தனுஷ் பட நாயகி என்ன ஆனார்

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அசுரன் படம் மட்டுமின்றி இவர் “கைட்டம்” என்னும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக மஞ்சு வாரியர் படக்குழுவினருடன் இணைந்து ஹிமாச்சலுக்கு சென்றுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் “கைட்டம்” படக்குழுவும்  சிக்கியுள்ளனர். இந்த தகவலை அறிந்த மஞ்சு வாரியரின் சகோதரர் அரசிடம் உதவி கேட்டுள்ளார்.

“நேர்கொண்ட பார்வை” படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர், குஷியில் ரசிகர்கள்

உடனே கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளீதரன் ஹிமாச்சல் அரசிடம் பேசினார். பின்னர் மஞ்சு வாரியர் உட்பட அந்த பகுதியில் சிக்கி தவித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்