ஆடை படத்தை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான அமலா பால்

அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஆடை” படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்திருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தாலும் அமலா பாலின் இந்த முயற்சி பலரால் பாராட்டப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து அமலா பால் நடித்த “அதோ அந்த பறவை போல” திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் “ஆடுஜீவிதம்” என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அமலா பால் நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‌தெலுங்கில் நானி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “ஜெர்சி”. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் விஷ்ணு – அமலா பால் நடிக்கவுள்ளனர்.

வனிதா செய்வது எல்லாம் கேவலமாக உள்ளது! வெளுத்து வாங்கிய முன்னாள் போட்டியாளர்

இதே கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான “ராட்சசன்” திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.