இளம் நடிகருக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து “கோமாளி” என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் “பாரிஸ் பாரிஸ்” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இது 2014 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “குயின்” படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை காஜல் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் காஜல் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதை வெங்கட் பிரபு இயக்குகிறார். காஜலுக்கு ஜோடியாக வைபவ் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.