மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் இறுதியாக “சர்கார்” திரைப்படம் வெளியானது. அதன் பிறகு பெரிதாய் தமிழ் திரைப்படங்களில் ஆர்வம் காட்டாத கீர்த்தி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இதனிடையே ஹிந்தி படமொன்றில் கமிட் ஆன கீர்த்தி அதற்காக தன் உடல் எடையை கடுமையான உடற்பயிற்சியின் மூலம் குறைத்துள்ளார்.


இந்நிலையில் கீர்த்தி மறுபடியும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருக்கிறார். புதுமுக இயக்குனர் ஈஸ்வர் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.