பிக்பாஸில் இருந்து வெளியேறிய மீரா மிதுனுக்கு அடித்த லக்!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் 16-வது போட்டியாளராக கலந்துக்கொண்டு வெளியேறியவர் மீரா மிதுன். மாடல் அழகியான மீரா எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாய் நுழைந்த போட்டியாளர்! ரசிகர்கள் அதிர்ச்சி

அருண் விஜய் – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் “அக்னி சிறகுகள்” படத்தில் மீரா நடிக்கவுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தை மூடர் கூடம் நவீன் இயக்குகிறார். இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.