தல அஜித்தின் வலிமை படம் குறித்து வெளியான சமீபத்திய தகவல்!

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து அஜித் – வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வலிமை என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இருந்தபோதிலும் படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராததால் தல ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ரசிகர்களும் அப்டேட் வேண்டும் என்று தினம் தினம் படக்குழுவிடம் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் வலிமை படத்தின் படப்பிடிப்பு சைலண்டாக நடந்து வருகிறதாம்.

இங்கே படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படக்குழு இம்மாத இடையில் சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.