மாஸ்டர் படம் குறித்து நான் இப்படி சொல்லவே இல்லையே? பிரபல டிவியின் செய்தியால் பதறிய மாஸ்டர் பட நடிகர்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மூன்றாவது லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் என் கதாபாத்திரம் அழுத்தமாக இருக்கும்; கதையில் என்னுடைய கதாப்பாத்திரதை நீக்கிவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது என்று சாந்தனு கூறியதாக பிரபல செய்தி நிறுவனம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டது.

இதை பார்த்ததும் பதறிய சாந்தனு ஏன்யா இப்படி எல்லாம் கிளப்புறீங்க, நான் இப்படி சொல்லவே இல்லயே, நான் பாட்டுக்கு சிவனேன்னு தான் இருக்கேன். டைட்டிலை மாத்துங்கபா என கோபமாக பதிவிட்டுள்ளார்.