5 ஸ்டார் ஹோட்டலில் வழங்கிய உணவில் புழுக்கள்! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்தவர் நிலா. இவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார். நிலா தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 5 ஸ்டார் ஹோட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் உள்ளதாக புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய நிலா அகமதாபாத்தில் உள்ள ட்ரீ ஹில்டன் என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தபோது அதில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற ஹோட்டல்களில் தங்க அதிக கட்டணத்தை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் புழுக்கள் உள்ள உணவை தருகிறார்கள். என்று பதிவிட்டுள்ளார்.