“வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும் மிஸ் பண்றேன்” – நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் உருக்கம்

70 மற்றும் 80 – களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர், அங்கும் கொடிகட்டி பறந்தார். கடந்த ஆண்டு துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாள். அதை முன்னிட்டு ரசிகர்களும், திரை பிரபலங்களும் அவரது நினைவலைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடரும் ரவுடி பேபி பாடலின் சாதனை! எத்தனை மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளருமான போனி கபூர் டுவிட்டரில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜான், என் வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும் உன்னை மிஸ் செய்கிறேன். எங்களுக்கு நீ வழிகாட்டி கொண்டே இரு, நீ எப்பொழுதும் எங்களுடன் தான் இருப்பாய். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.