நியூ லுக்கிற்கு மாறிய நடிகை நஸ்ரியா – வைரலாகும் புகைப்படம்

துறுதுறு நடிப்பின் மூலம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் நஸ்ரியா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தாத நஸ்ரியா ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் நஸ்ரியா ஓணம் திருநாளுக்கு வாழ்த்து கூறும் வகையில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணனுக்கு அடித்த லக்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

அந்த புகைப்படத்தில் நஸ்ரியா புதிய லுக்கில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் “சூப்பர்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.