சென்னையில் வசூல் வேட்டை நடத்தி வரும் நேர்கொண்ட பார்வை – இத்தனை கோடிகளா?

தல அஜித் மற்றும் ஹச்.வினோத் கூட்டணியில் உருவான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக சென்னையில் நான்கு நாட்களில் ரூ 5.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. நான்காவது நாளான நேற்று மட்டுமே ரூ 1.42 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய மீரா மிதுனுக்கு அடித்த லக்!

நேர்கொண்ட பார்வை இதுவரை சென்னையில் செய்த மொத்த வசூல் விவரம் இதோ

முதல் நாள் – ரூ 1.58 கோடி

இரண்டாவது நாள் – ரூ 1.17 கோடி

மூன்றாவது நாள் – ரூ 1.38 கோடி

நான்காவது நாள் – ரூ 1.42 கோடி

இந்த வசூல் வரும் வாரங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.