நேர்கொண்ட பார்வை பிரம்மாண்ட முதல் நாள் வசூல்! இத்தனை கோடியா?

தல அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார்.

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேற்று ரிலீஸான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வைரலாகும் ஸ்ரீ தேவி மகளின் பெல்லி டான்ஸ் வீடியோ!

இந்நிலையில் சென்னையில் மட்டும் நேர்கொண்ட பார்வை முதல் நாள் சுமார் ரூ 1.58 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.