இரண்டாவது நாளில் சென்னையில் வசூலை குவித்த நேர்கொண்ட பார்வை: எத்தனை கோடி தெரியுமா?

அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த வாரம் வெளியான திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இது 2016 ஆம் ஹிந்தியில் வெளியாகி ஹிட் ஆன பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் அழுத்தமான திரைக்கதையும் தல அஜித்தும் தான்.

நேற்றைய முன்தினம் வெளியான “நேர்கொண்ட பார்வை” உலகம் முழுவதிலும் வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் இப்படம் முதல் நாள் ரூ 1.58 கோடி வரை வசூல் செய்துள்ளது. இரண்டாவது நாளான நேற்று ரூ 1.17 கோடி வசூல் செய்துள்ளது.

இதற்காகவா பிக்பாஸ் சென்றேன்…வருத்தப்பட்டு சரவணன் அளித்த முதல் பேட்டி!

மொத்தமாக சென்னையில் மட்டும் சுமார் ரூ 2.75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.