நேர்கொண்ட பார்வை சிறப்பு காட்சிகள் ஏற்பாடு, பதற்றத்தில் தல ரசிகர்கள்

அஜித் – ஹச்.வினோத் கூட்டணியில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதை முன்னிட்டு இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு  சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் பட காட்சிகள், வசனங்கள், எதுவும் லீக் ஆகிவிடக்கூடாது என்று தல ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர்.