நேர்கொண்ட பார்வை முதல் நாள் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

தல அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்த படம் “நேர்கொண்ட பார்வை”. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை ரீமேக் படம் என்றபோதிலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அஜித் சார் சொன்னது 100% சரி – மகிழ்ச்சியின் உச்சத்தில் நேர்கொண்ட பார்வை நடிகை!

நேற்று உலகம் முழுவதிலும் வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 15 கோடி வரை வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டுமே ரூ 1.58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.