காஷ்மீர் விவகாரம்: சர்ச்சையில் சிக்கிய அமலா பால்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஆடை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அமலா பால் ஆடையின்றி நடித்திருந்தார். அது பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து அமலா பால் நடித்துள்ள “அதோ அந்த பறவை போல” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் “ஆடுஜீவிதம்” என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த அமலா பாலை ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீனா! ரசிகர்கள் மகிழ்ச்சி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஆர்டிகிள் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகளை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதை வரவேற்று கருத்து தெரிவித்த அமலா பால் காஷ்மீருக்கு காவி தலைப்பாகை கட்டியபடி உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் கடுப்பாகி போன நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.