என்னை குறை சொல்பவர்கள் முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசித்து பாருங்கள்..கோபத்தில் நித்யா மேனன் வெளியிட்ட வீடியோ

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் “மிஷன் மங்கள்” என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார். இப்படம் நேற்று திரைக்கு வந்தது. மேலும் தமிழில் சைகோ, தி அயர்ன் லேடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் “தி அயர்ன் லேடி” திரைப்படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நித்யா தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கேரளாவில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் நித்யா வெள்ளம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இது இணைய வாசிகளுக்கு கோபத்தை தூண்டியது. அவரை ட்ரோல் செய்து வீடியோ, மீம் போன்றவற்றை வெளியிட்டு வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையை தூண்டிவிடும் வனிதாவுக்கு லாஸ்லியா வைத்த பட்டப்பெயர் என்ன தெரியுமா?

இவர்களது சேட்டை எல்லை மீறி போகவே கடுப்பான நித்யா மேனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வழக்கமாக இதுபோல் ட்ரோல் செய்தால் கண்டுக் கொள்ளமாட்டேன். ஆனால் இனிமேல் பொறுக்க முடியாது. எல்லை மீறி போகிறது. முதலில் கண்ணாடியை பார்த்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டு பாருங்கள். நான் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை என்பதற்காக எதுவும் உதவி செய்யவில்லை என அர்த்தமில்லை, இவ்வாறு நித்யா மேனன் பேசியுள்ளார்.