5வது திருமணம் செய்த நடிகை…12 நாட்களில் முறிந்த திருமண உறவு…காரணம் இதுதான்

பமீலா ஆண்டர்சன் – ஜான் பீட்டர்ஸ் ஆகியோரின் திருமணம் 12 நாட்களில் முறிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி மாலிபுவில் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸ்க்கு திருமணம் நடைப்பெற்றது. திருமணம் முடிந்து பல நாட்கள் ஆன பிறகும் இவர்களது திருமணம் பதிவு செய்யப்படாததால் சந்தேகம் எழுந்தது. தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி நடிகை பமீலா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் “எங்கள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் அன்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு நடுவில் ஒருவருக்கொருவர் என்ன எதிர்பார்க்கிறோம் என்று பரிசீலிக்க தற்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.

52 வயதாகும் பமீலா ஆண்டர்சனுக்கு இது 5வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.