நடிகர் பார்த்திபனுக்கு அடித்த லக்.. விரைவில் ஆங்கில படத்தில் நடிக்கிறார்

பார்த்திபன் எழுதி இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தில் பல கேரக்டர்கள் இருந்தாலும் பார்த்திபன் மட்டுமே முழு படத்திலும் தோன்றுவார். இந்த புது முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த படத்தின் மூலம் பார்த்திபன் உலக இயக்குனர்கள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் என்று பாரதிராஜா புகழ்ந்தார்.

ஒத்த செருப்பு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வரும் வேலையில் பார்த்திபன் விரைவில் தான் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்றைய தேதியின் விஷேச சேதி, விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் துக்ளக் தர்பார். புஷ்கர் காயத்ரி வழங்கும் சுழல் என்ற வெப் சீரிஸ். சிம்ரனின் சொந்த படம். எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம். சமீப பிரபல இயக்குனரின் படம் மற்றும் என் இரவின் நிழல். இன்னும் சில.

இவையன்றி இவ்வருடம் கடைசியில் ஒரு நேரடி ஆங்கில படத்தில் நடிக்கிறேன். இதற்காக ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பின் பேரில் மார்ச்சில் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த பார்த்திபன் விரும்பிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.