
சந்துநத், அஹானா கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பதினெட்டாம் படி. இப்படத்தில் மம்முட்டி, பிரித்திவி ராஜ், ஆர்யா உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் சோனி என்ற கதாபாத்திரத்தில் இளம் நடிகர் நகுல் தம்பி என்பவர் நடித்திருந்தார். 20 வயதான இவர் கடந்த மாதம் 5 ஆம் தேதி மோசமான கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதனால் அவருக்கு மூளை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரூ. 7 லட்சம் செலவு செய்தும் அவர் கண்விழிக்கவில்லை. மேற்கொண்டு சிகிச்சை அளிக்க ரூ 12 லட்சம் வரை தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது குடும்பத்தினர் நகுலின் சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வருகின்றனர்.