“நேர்கொண்ட பார்வை” படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர், குஷியில் ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 10 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பார்த்து விட்டு பிரபல நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார். அந்த பதிவை தல ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

வடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: இந்த படமும் போச்சா? ரசிகர்கள் வேதனை

ஏற்கனவே ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் பாராட்டிய நிலையில் தற்போது சரத்குமார் பாராட்டியுள்ளார்.