தளபதி 64ல் இணைந்த பிரபல இயக்குனர்!

 

தளபதி 64ல் இணைந்த பிரபல இயக்குனர்!

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெரிப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில் படத்தின் உண்மையான பட்ஜெட் இதுதான்…தயாரிப்பாளரே கூறிய சூப்பர் தகவல்

பிகில் படத்தின் டிரைலருக்காக தளபதி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளியாகி கொண்டிருக்கிறது.

தளபதி 64 என அழைக்கப்படும் அப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால் இயக்குனர் ரத்ன குமார் இப்படத்தில் கூடுதல் ஸ்கிரீன் பிளே எழுத்தாளராக பணியாற்றுகிறாராம்.

விஜய் டிவி சீரியலில் சினிமா நடிகை! யார் தெரியுமா?

இயக்குனர் ரத்ன குமார் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.