பிக்பாஸில் இருந்து இவர்களை முதலில் வெளியேற்ற வேண்டும்! பிரபல இயக்குனர் பேச்சு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி 46 நாட்கள் கடந்துவிட்டது. வழக்கமான டாஸ்க்குகள், எலிமினேஷன், காதல், சண்டை என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக பரபரப்பாகி இருக்கிறது.

இந்த வார ஆரம்பத்தில் சரவணன் தீடிரென வெளியேற்றப்பட்டார். இந்த பிரச்சினை ஓயும் முன்னரே நடிகை கஸ்தூரி வைல் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

நரக வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்…வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

இந்நிலையில் இயக்குனர் பேரரசு சமீபத்திய பேட்டியில் பேசுகையில் “வெளியேற்றும் அளவிற்கு சரவணன் செய்தது பெரிய காரணமாக இல்லை. அப்படி வெளியேற்ற வேண்டுமென்றால் பிளேபாய் போல காதல் என்ற பெயரில் வீட்டிற்குள் சிலர் செய்யும் செயல் மோசமாக உள்ளது. அவர்களை தான் முதலில் வெளியேற்ற வேண்டும்”. இவ்வாறு பேரரசு அப்பேட்டியில் கூறியுள்ளார்.