கோமாளி டிரைலரில் ரஜினி குறித்த சர்ச்சை காட்சி…ஜெயம் ரவியிடம் வேண்டுகோள் விடுத்த தயாரிப்பாளர்!

ஜெயம் ரவி நடிப்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கோமாளி” இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சாரா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் விதமாக ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “கோமாளி டிரைலரில் பொழுதுபோக்குக்காக ரஜினியின் காட்சிகள் சேர்ந்திருப்பது குறித்து ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரை தீவிரமாக நேசிப்பவர்கள் அனைவரின் கருத்துகளையும் பார்த்தேன். நான் இயக்குனர் பிரதீப் மற்றும் ஜெயம் ரவியிடம் வைக்கும் கோரிக்கை என்னவெனில் படத்தில் கேலி கிண்டலுக்குகாக திட்டமிடப்படாமல் இந்த காட்சியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.