அஜித்திற்கு இருப்பது ரசிகர்களே கிடையாது – பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

தல அஜித் மற்றும் ஹச்.வினோத் கூட்டணியில் அண்மையில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். போனி கபூரே இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

இந்த தகவல்கள் ஒருபுறம் இருக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அஜித் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

அதில் ரசிகர்களுக்கு அஜித் மேல் உள்ள பாசத்தை போல் நான் எங்கேயும் பார்த்ததில்லை. அஜித்திற்கு இருப்பது ரசிகர்களே கிடையாது வெறியர்கள். ஒரு நடிகர் நல்ல படம் கொடுக்கவில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள். ஆனால் அஜித் என்ன செய்தாலும் அவரது ரசிகர்கள் ரசிக்கிறார்கள். என்று தெரிவித்துள்ளார்.