பிரபாஸின் “சாஹோ” பட பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ

பாகுபலி படத்தை பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் “சாஹோ”. இப்படத்தில் பிரபாஸூடன் இணைந்து ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெரிப், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஜித் இயக்கியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில் இன்றே திரையரங்குகளில் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மெஹபூப் நகரில் உள்ள திருமலா தியேட்டரில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.