கோமாளி படக்குழுவுக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகர்!

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோமாளி. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது.

அதில் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்த காட்சிகள் கிண்டலாக சொல்லபட்டிருந்தது. இதற்க்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த காட்சியை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட இயக்குனர் பிரதீப் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரஜினி குறித்த காட்சி நிச்சயம் படத்தில் இடம்பெறாது என்றும் தானும் ரஜினியின் தீவிர ரசிகர் தான் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகளை குறிப்பிட்டு “விடு தலைவா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என டுவிட் செய்து தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.