ஜெனிலியாவுக்கு வித்யாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கணவர் ரித்தேஷ்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. பின்னர் ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துக்கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெனிலியாவுக்கு அவரது கணவர் ரித்தேஷ் வித்யாசமாக வாழ்த்து கூறியுள்ளார்.

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ்!

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “நம் நெருங்கிய தோழியே வாழ்க்கை துணையாக வந்தால் வாழ்வு வரமாகும். என் செல்லம் ஜெனிலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்து நீ தான் வலிமையான தாய். நம் குடும்பம் ஒன்றாக இருக்க நீ தான் காரணம். இந்த வாழ்க்கையில் நீ செய்யும் அனைத்து நல்ல காரியங்களுக்காக அடுத்த பிறவியிலும் உனக்கு அதே கணவரை அளித்து கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.


இதில் கடைசி வரி நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும் ஜெனிலியா மீது ரித்தேஷ் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பையே அது காட்டுகிறது.