சாஹோ படத்திலிருந்து வெளியான அருண் விஜயின் செம ஸ்டைலா லுக்!

பாகுபலி படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் “சாஹோ”. இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரிப், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், லால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சுஜீத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதை முன்னிட்டு சமீபத்தில் வெளியான சாஹோ டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டில் சாண்டி தான் உண்மையான வில்லன் – பிரபல நடிகை ஓபன் டாக்

இந்நிலையில் அருண் விஜயின் செம ஸ்டைலான லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதை அருண் விஜயே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.