உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதில் வனிதா வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.

இந்நிலையில் எலிமினேட் ஆன சாக்ஷி , அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அப்போது சாக்ஷி தமிழக மக்களை நாய்கள் என விமர்சித்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சாக்ஷி அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி “அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும் எனது வார்த்தை உங்கள் மனதை புண்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன். அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருங்காலத்தில் இது போன்ற தவறு நடக்காது என்று உறுதியளிக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here