கவினை மோசமாக திட்டி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தான் ஏன் வெற்றி பெறுவோம் என்பதை சொல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது பேசிய கவின், தான் எல்லோரிடமும் நட்புடன் பழகுவதாகவும் அவர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்பதாகவும் கூறினார். அப்போது வனிதா சாக்ஷி உன் பிரெண்ட் தான், அவரிடம் ஏன் அப்படி ரியாக்ட் செய்தாய் என்று கேட்டார். அதற்கு கவின் நட்பையும் தாண்டி ஒரு கட்டத்தில் அவர் என்னை பயன்படுத்திக்கொள்கிறாரோ என்று தோன்றியது என்று கூறினார்.

“இந்தியன் 2” படத்தின் கதை இதுவா?

கவினின் இந்த கருத்திற்கு சாக்ஷி அகர்வால் வீடியோ மூலம் பதில் கூறியுள்ளார். கவின் எனக்கு Propose பண்ணாங்களா? இல்லை நான் கவினுக்கு Propose பண்ணேனா என்ற கேள்விக்கு எனக்கு பதில் வேணும், பெண்களை உடை மாற்றுவது போல் ஈசியாக உன்னால் மாற்றமுடியும் கவின் ஆனால் எனக்கு அப்படி கிடையாது என்று கோபமாக எழுப்பியுள்ளார்.