இந்த வயதில் இதெல்லாம் தேவையா? மாமனாரிடம் கோபப்பட்ட சமந்தா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா இவர் நடித்துள்ள “மன்மதடு 2” படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரநாத் இயக்கியுள்ளார். நாகர்ஜுனா பிளேபாயாக நடித்துள்ள இப்படத்திற்கு பாஸிடிவ் விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மன்மதடு 2 பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் நாகர்ஜுனா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய நாகர்ஜுனா 59 வயதில் இப்படி ஒரு  படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மட்டுமல்ல என் குடும்பத்தினரும் விரும்பவில்லை.

என்னை பற்றி நீங்கள் கேள்விப்பட்டது எல்லாம் உண்மை தான்: மனம் திறந்த தமன்னா!

முதலில் இந்த டிரைலரை பார்த்த சமந்தா அதிருப்தி அடைந்தார். இந்த வயதில் ஏன் இப்படி நடிக்கிறீர்கள் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும், என்று சமந்தா கேட்டார். ஆனால் டிரைலரை மீண்டும் பார்த்த பிறகு அவர் தனது மனதை மாற்றிக்கொண்டார். இவ்வாறு நாகர்ஜுனா கூறியுள்ளார்.

“மன்மதடு 2”  படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் ராவ் ரமேஷ், பிரமானந்தம், லட்சுமி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.