பிக்பாஸ் தர்ஷன் மீது காதல் புகார் கூறியிருக்கும் நடிகை சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவரா? வைரலாகும் நெருக்கமான புகைப்படம்

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டு அனைவரையும் கவர்ந்தவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவர் தான் இந்த சீசன் வின்னர் என எதிர்பார்த்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகார் கூறியிருந்தார். இதற்கு தர்ஷன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.

தர்ஷன் சனம் ஷெட்டியின் விட்டு சென்றதற்கு முக்கிய காரணமாக சொல்வது சனம் ஷெட்டி அவரது முன்னாள் காதலருடன் இரவு நெருக்கமாக இருந்தார் என்பது தான்.

இந்நிலையில் சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் பெயர் அஜய், இருவரும் கலை வேந்தன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.