பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணனுக்கு அடித்த லக்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை எட்டிவிட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதில் சரவணன் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் எந்த காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சரவணன் பல நேர்காணலில் இதை சொல்லி வருத்தப்பட்டார். இது ஒருபுறம் இருக்க பிக்பாஸின் மூலம் அவருக்கு கிடைக்காத அங்கீகாரத்தை தமிழக அரசு கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தரமான தமிழ் படங்களை தேர்வு செய்து தமிழக அரசு தலா ரூ. 7 லட்சம் மானியமாக வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குழு உறுப்பினராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம் – கொண்டாட்டத்தில் மற்ற போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சில தினங்களிலேயே தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.