பிக்பாஸ் அறிவிப்பால் கதறி அழும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி 43 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் போது கன்ஃபெஷன் ரூமிற்கு சரவணனை அழைத்த பிக்பாஸ் பெண்கள் விஷயத்தில் நீங்கள் பேசியது தவறு. அதனால் நீங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கூறினார்.

இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் சரவணன் வெளியேற்றப்பட்ட விஷயத்தை பிக்பாஸ் மற்ற ஹவுஸ்மெட்ஸிடம் கூறினார். இதனை கேட்டவுடன் சாண்டி, கவின் மற்றும் மதுமிதா அழ ஆரம்பித்துவிட்டனர்.