இந்த நடிகை இன்னும் மாறவே இல்லை! ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பேசிய பிரபல இயக்குனர்

இந்த நடிகை இன்னும் மாறவே இல்லை! ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பேசிய பிரபல இயக்குனர்

எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான “நம்ம வீட்டு பிள்ளை” மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடினார். இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட சீனு ராமசாமி இடம் பொருள் ஏவல் படத்தில் கலைச்செல்வி, தர்மதுரை படத்தில் அன்புச்செல்வி. இந்திய சினிமாதுறையின் இயல்பான நடிகை, எளிமை, அன்பான உள்ளம், இத்தனை ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. நன்றி மா என வாழ்த்தி உள்ளார்.