மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகை!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியை சேர்ந்தவர் பிரக்ன்யா. சீரியல் நடிகையான இவருக்கு பார்கர் என்ற கணவரும் ஸ்ருதி என்ற 17 வயது மகளும் உள்ளனர்.

பார்கர் நேற்று வழக்கம்போல் ஜிம்முக்கு சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த போது அவருக்கு அந்த இரட்டை அதிர்ச்சி காத்திருந்தது. பெட்ரூமில் உள்ள பேனில் நடிகை பிரக்ன்யா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். மகள் ஸ்ருதியோ பேச்சு மூச்சில்லாமல் படுக்கையில் இருந்துள்ளார். இதனை கண்டு பதறிய பார்கர் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

காஷ்மீர் விவகாரம்: சர்ச்சையில் சிக்கிய அமலா பால்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தற்கொலைக்கு முன்பாக பிரக்ன்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் என் மகளை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு யாரும் பொறுப்பல்ல என்று அக்கடிதத்தில் குறிபிட்டுள்ளார். அதை கைப்பற்றிய போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.