தெய்வமகள் வாணி போஜனுக்கு அடித்த லக்! குஷியில் ரசிகர்கள்

சின்னத்திரை உலகின் நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் வாணி போஜன். முன்னணி நடிகைகள் பலருக்கும் கிடைக்காத புகழ் “தெய்வமகள்” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் வாணி போஜனுக்கு கிடைத்தது.

அதை தொடர்ந்து பெரிதாய் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தாத வாணி போஜன் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தற்போது நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். மேலும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதில் ஹீரோவாக இயக்குனர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். இப்படத்தை சமீர் இயக்குகிறார்.

இவ்விரண்டு படங்கள் மட்டுமல்லாமல் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை நடிகர் அருண் பாண்டியனின் ஏ.பி.குரூப்ஸ் தயாரிக்கிறது.

10 கோடி கொடுத்தும் அந்த விளம்பர படத்தில் நடிக்க மறுத்த நடிகை!

முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில் வாணி போஜன் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆவதை அறிந்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.