10 கோடி கொடுத்தும் அந்த விளம்பர படத்தில் நடிக்க மறுத்த நடிகை!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இவர் திரையில் தோன்றி பல வருடங்கள் ஆன போதிலும் இவருக்கான கிரேஸ் சற்றும் குறைந்தபாடில்லை. அதற்கு காரணம் யோகா, ஒர்க்அவுட், தியானம் போன்றவற்றின் மூலம் தனது உடலை சிக்கென்று வைத்துள்ளார். 13 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ள ஷில்பா ஷெட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மாத்திரை விளம்பரத்தில் நடிக்குமாறு பிரபல நிறுவனம் ஷில்பா ஷெட்டியிடம் கேட்க, அவரோ சற்றும் யோசிக்காமல் நோ சொல்லிவிட்டாராம். ரூ 10 கோடி சம்பளம் தருகிறோம் என்று சொல்லியும் கூட எத்தனை கோடி கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம்.

தற்கொலை முயற்சி செய்த மதுமிதாவின் பரிதாப நிலை – முன்னாள் போட்டியாளர் ஓபன் டாக்

இது குறித்து ஷில்பா ஷெட்டி பேசுகையில் எனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை நான் விற்பனை செய்ய மாட்டேன். உடல் எடையை குறைக்கும் மாத்திரைகள் உடனே பலன் அளிக்கும் என்பது கேட்க நன்றாக உள்ளது. ஆனால் சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதை எந்த மாத்திரையாலும் அடித்துக் கொள்ளமுடியாது. இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.