கமலுக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த சிறப்பு பரிசு! என்ன தெரியுமா?

ஸ்ருதிஹாசன் நடிப்பில் தமிழில் இறுதியாக சிங்கம் 3 படம் வெளியானது. அதன் பிறகு பெரிதாய் தமிழ் படங்களில் கமிட் ஆகாத ஸ்ருதி ஓரிரு தெலுங்கு மற்றும் ஹிந்தி படத்தில் நடித்து வந்தார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ஹாலோ சகோ” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார்.

இந்நிலையில் நீண்ட காலம் கழித்து ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தை இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜெகநாதன் இயக்குகிறார்.

இது ஒருபுறம் இருக்க ஸ்ருதிஹாசனின் தந்தையும், நடிகருமான கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவருக்கு பலர் வாழ்ந்து கூறி வருகின்றனர்.

உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அனேகன் பட நாயகி! வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அன்புள்ள பாபுஜி, நடிப்புலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்து எங்களை பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் எங்களில் பலருக்கு ஊக்கமளித்திருக்கிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தமான மகாநதி படத்தின் போஸ்டரை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளேன். கலைத்துறைக்கு 60 ஆண்டுகளாக உங்களை அர்பணித்துக் கொண்டுள்ளீர்கள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அறுபது ஆண்டுகளுக்கு மேல் உங்களது கலைப் பயணம் தொடரட்டும், என ஸ்ருதிஹாசன் வாழ்ந்து தெரிவித்துள்ளார்.