மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கிய தயாரிப்பாளர் – ரசிகர்கள் ஷாக்!

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படுதோல்வி அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து ஓவியா நடிப்பில் வெளியான 90ML படத்தில் சிம்பு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “மஹா” படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். மஹா விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி  நீண்ட மாதங்கள் ஆகியும் மாநாடு படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. படம் ட்ராப் ஆகிவிட்டதாக ஒரு சிலர் கூறினர். ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த கருத்தை மறுத்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் புதிதாக என்ட்ரி கொடுத்த போட்டியாளர்…அடடே இவரா?

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “மாநாடு” படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை கேட்டு சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.