நீங்களே இப்படி செய்யலாமா? புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சோனம் கபூர். இவர் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளாவார். சோனம் கபூருக்கு 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அவுஜா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சோனம் கபூர் அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகைகளில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அப்படி சோனம் கபூர் சமீபத்தில் சிவப்பு நிற உடை அணிந்து, கையில் ஹேண்ட் பேக் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அவர் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக் ஆனது பாம்பு தோலால் செய்யப்பட்டிருந்தது.

என் நடிப்பை இழிவுபடுத்திவிட்டனர்…நடிகர் கவுண்டமணி புகார்!

அதை பார்த்த ஒருவர் விலங்குகள் நல ஆர்வலராக இருந்து கொண்டு நீங்களே இப்படி செய்யலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.