சூப்பர் ஸ்டாருடன் ஒரே ஒரு சீன் நடித்துவிட்டு உயிரை விடவும் தயார் – உருக்கமாக பேசிய நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுக்காக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்டர்நெட் பிரபலமும், ரஜினியின் தீவிர ரசிகருமான பிஜிலி ரமேஷ் அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் பேசிய பிஜிலி ரமேஷ் “சூப்பர் ஸ்டாருடன் ஒரே ஒரு சீன் நடித்துவிட்டு உயிரை விட்டாலும் சந்தோஷம்” என கூறியுள்ளார்.

உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா? கவின் கேள்வியால் ஷாக் ஆன லாஸ்லியா

பிஜிலி ரமேஷ் இன்டர்நெட் மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.