2.0 சீனாவில் முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? சூப்பர் ஸ்டார் செம்ம மாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 2.0. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அக்சய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 2.0 திரைப்படம் இந்த வாரம் சீனாவில் ரிலீஸ் ஆக உள்ளது.

சாஹோ இந்த படத்தின் காப்பியா? கொந்தளித்த ப்ரென்ச் இயக்குனர்

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முன்பதிவில் மட்டுமே சுமார் ரூ 1 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.