நான் ஒருவரை காதலிக்கிறேன் – மனம் திறந்த நடிகை டாப்ஸி!

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்ஸி. தமிழில் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “மிஷன் மங்கல்” படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் “ராஷ்மி ராக்கெட்” என்ற படத்தில் தடகள வீராங்கனையாக நடித்து வருகிறார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் டாப்சி பிரபல ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா!

அதில் தான் ஒருவரை காதலிப்பதாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.