என்னை பற்றி நீங்கள் கேள்விப்பட்டது எல்லாம் உண்மை தான்: மனம் திறந்த தமன்னா!

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான “தேவி 2” படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படுதோல்வி அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து தட் இஸ் மகாலட்சுமி, சயீரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது. மேலும் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிவரும் படத்திலும் அவரது காட்சிகளை நடித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

கவினை செம கலாய் கலாய்த்த கஸ்தூரி!

இது குறித்து தமன்னாவிடம் கேட்கையில் “ஆம் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்துவிட்டேன். எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை பெற்றோரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”. இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.

விரைவில் தமன்னா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.