நாளையே நேர்கொண்ட பார்வை ரிலீஸ், எங்கு தெரியுமா?

தல அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நேர்கொண்ட பார்வை” இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூரில் நாளை ப்ரீமியர் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு தற்போது படுவேகமாக நடைப்பெற்று வருகிறது.