அமிதாப் பச்சன் செய்த தவறை நேர்கொண்ட பார்வையில் சரிசெய்த அஜித்

தல அஜித் நடித்துள்ள “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படம் அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி ஹிட் ஆன பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் அஜித் ரசிகர்களுக்காக சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் ஒரு ஸ்டண்ட் காட்சியும், இரண்டாவது பாதியில் ஒரு பாடலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிங்க் படத்தில் அமிதாப் பச்சனை ஒரு குடிக்காரராக காட்டப்பட்டிருக்கும். ஆனால் நேர்கொண்ட பார்வையில் அஜித் குடிகாரர் கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி.

அஜித்துக்கு தமிழ்நாட்டில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவரை குடிகாரராக காட்டினால் அது அவரது ரசிகர்களுக்கு தவறான உதாரணமாக மாறிவிடும் என்பதற்காகவே அஜித் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.