தளபதி 64 – வில்லன் இவரா? பெரிய எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் “பிகில்‌”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரிப், கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜயின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போதே வெளியாகிவிட்டது.

5 ஸ்டார் ஹோட்டலில் வழங்கிய உணவில் புழுக்கள்! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

விஜய் அடுத்து மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த செய்தி அனைத்து நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.